Asianet News TamilAsianet News Tamil

சூர்யாவின் 'NGK ' படத்தில் இணைந்த தம்பி கார்த்தி!

சூர்யா நடித்துள்ள 'என்.ஜி.கே' திரைப்படம், இம்மாதம் 31 ஆம் தேதி, வெகு விமர்சியாக ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருமாகியுள்ள இந்த படத்திற்கு ஏற்கனவே முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்த்தத்தால், இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

karthi teaser added in ngk movie release
Author
Chennai, First Published May 26, 2019, 5:30 PM IST

சூர்யா நடித்துள்ள 'என்.ஜி.கே' திரைப்படம், இம்மாதம் 31 ஆம் தேதி, வெகு விமர்சியாக ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருமாகியுள்ள இந்த படத்திற்கு ஏற்கனவே முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததால், இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

karthi teaser added in ngk movie release

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் படி, 'என்.ஜி.கே' படத்துடன் இணைந்துள்ளது, சூர்யாவின் கார்த்தி நடித்து வரும் கைதி திரைப்படம்.

அதாவது, 'என்.ஜி.கே' ரிலீஸ் செய்யப்படும் அனைத்து திரையரங்கிலும் கைதி படத்தின் டீசரை வெளியிட, படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். 'என்.ஜி.கே' மற்றும் 'கைதி' ஆகிய இரண்டு படங்களையும், ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.

karthi teaser added in ngk movie release 

கார்த்தியின் கைதி திரைப்படம் விறுவிறுப்பாக சார்பென்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை 'மாநகரம்' படத்தை இயக்கி முதல் படத்திலேயே ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படம் ஜூலை மாதல் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios