karthi talking about katru veliyidai movie

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடித்துள்ள "காற்று வெளியிடை" படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னம், சுஹாசினி, கதாநாயகன் கார்த்தி, நாயகி அதிதி ராவ், நடிகர் சூர்யா. ஏ.ஆர்.ரகுமான் போன்ற பலர் கலந்துக்கொண்டர்னர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த இசைவெளியீட்டு விழாவில், படம் குறித்து பேசிய கார்த்தி...இது எனது கனவுப்படம் என்றால் அது நிச்சயமாக பொய்தான். ஏனெனில் இவ்வளவு அழகான கனவை நான் இதுவரை கண்டதில்லை என்றார்.

பின் மணிரத்னத்தை முதன்முதலாக பார்த்து உதவியாளராக சேர அனுமதி கேட்டபோது அவர் என்னை தாராளமாக வரவேற்பதாக கூறினார். உதவியாளராக பணிபுரிந்து கொண்டிருந்தபோது 'நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடி' என்று அவர் கூறினார். 

 அவர் கூறியபடியே சரியான சந்தர்ப்பமாக 'பருத்திவீரன்' வாய்ப்பு கிடைத்து அந்த படம் வெற்றியும் பெற்றதால் இன்று ஒரு நடிகராகியுள்ளேன். அவர் கொடுத்த தைரியம் தான் என்னை நடிகனாக்கியது

'காற்று வெளியிடை' படத்தின் ஸ்கிரிப்டை கொடுத்து என்னை படிக்க சொன்னார். நான் படித்து முடித்ததும் இந்த கேரக்டருக்கு நான் பொருத்தமானவனா? என்று எனக்கே சந்தேகம் ஏற்பட்டது. 

இந்த படத்தின் பைலட் கேரக்டர் எனக்கு அனுபவம் இல்லாத ஒரு புதிய கேரக்டர். எனக்கு அந்த கேரக்டரை புரிந்து கொள்ளவே கஷ்டமாக இருந்தது. இதற்காகவே நான் பைலட் அருகில் உட்கார்ந்து பயணம் செய்து பல அனுபவம் பெற்றேன். மணிரத்னம் என்னை கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேரக்டராகவே மாற்றிவிட்டார் என்று பெருமித்ததோடு கூறினார்.

இந்த படம் ஒரு போர்ப்படம் அல்ல, காதல் படம் தான். ஆனாலும் அந்த ஸ்பிரிட்டை கொண்டு வருவது என்பது ஒரு சவாலான விஷயம். இந்த படத்தில் என்னை பைலட்டாகவே மாற்றிய இயக்குனருக்கு எனது நன்றிகள் என்று கூறினார்.

ஒரு 'அலைபாயுதே' மாதிரியோ அல்லது ஒரு 'ஓகே கண்மணி' மாதிரியோ எதிர்பார்த்து இந்த படத்திற்கு வரவேண்டாம். ஆனால் இதுவும் லவ் ஸ்டோரிதான். ஒரு லவ் ஸ்டோரி படத்துக்கு போகிறோம் என்று எதிர்பார்த்து வாருங்கள். நிச்சயம் இந்த படம் உங்களுக்கு ஏமாற்றம் கொடுக்காது.