நடிகர் கார்த்தி அடுக்கடுக்காக மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.  அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், வித்தியாசமான கையம்சத்துடன் உருவாகி வரும் கைதி படத்திலும்,  ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகாவின் தம்பியாகவும், 'ரெமோ' பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இதனால் இந்த மூன்று படங்களைப் பற்றியும் அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருகிறது.  தற்போது வெளியாகியுள்ள தகவலில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், கார்த்தி மற்றும் கீதா கோவிந்தம் பட நடிகை ராஷ்மிக்காவும் இணைந்து நடிக்க உள்ள, படத்தின் பெயர் சுல்தான் என்று  வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஸ்டூடியோ ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர் .பிரபு தயாரிக்கிறார். ஏற்கனவே ரஜினி நடிப்பில் 'சுல்தான் தி வாரியர்' என்று அனிமேஷன் படம் உருவாகி கைவிடப்பட்டது. தற்போது இந்த படத்தின் பாதி பெயரான 'சுல்தான்' என்கிற டைட்டில் கார்ர்த்தியின் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது