Asianet News TamilAsianet News Tamil

ரஜினிக்கு ஜோடியாகிறாரா சிம்ரன்...? கார்த்தி சுப்புராஜ் ஓபன் டாக்...!

karthi suburaj about rajinikanth movie
karthi suburaj about rajinikanth movie
Author
First Published Jun 1, 2018, 12:53 PM IST


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'காலா' மற்றும் '2.o' படங்களை தொடர்ந்து, இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே அதிகாரப் பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் ஸ்க்ரிப்டிங் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி சுப்புராஜ்.

karthi suburaj about rajinikanth movie

ஏற்கனவே இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் பரவலாக ஒரு செய்தி தீயாக பரவியது.karthi suburaj about rajinikanth movie

மேலும் பாபிசிம்ஹா உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் பெயரும் உலா வந்தது. இந்நிலையில் இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ்.karthi suburaj about rajinikanth movie

இது குறித்து அவர் கூறுகையில், ரஜினி படத்தை பொறுத்தவரை, விஜய் சேதுபதி மட்டும் தான் உறுதியாகியிருக்கிறார். மற்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து பரிசீலனையில் தான் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுவது உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios