பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தில் நடிக்கும் சர்தார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தமிழ் திரையுலகி முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'சுல்தான்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' மற்றும் சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கிய விருமன் படத்திலும் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. இந்த 2 படங்களின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி 2, பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் கார்த்தி. இதில் சர்தார் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

கார்த்தியின் வித்தியாசமான லூக்குடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழு கடந்தாண்டு வெளியிடப்பட்டது. இதில் கார்த்தி வயதான தோற்றத்தில் காட்சியளித்தார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் 'கர்ணன்' பட நாயகி ரஜிஷா விஜயன் நடிக்கின்றனர். மேலும் நடிகை சிம்ரன் வயதான கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும், திலீப் சுப்புராயன் சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார். சர்தார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில் கார்த்தி போலீஸ் கெட் அப்பில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அவர் வயதான தோற்றத்தில் இருந்து இளமை தோற்றத்துக்கு மாறியுள்ளதை ஒப்பிட்டு வெளியாகி உள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், வியப்படைந்து உள்ளனர்.