சர்தார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் 'கர்ணன்' பட நாயகி ரஜிஷா விஜயன் நடிக்கின்றார். மேலும் நடிகை சிம்ரன் வயதான கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழ் திரையுலகி முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'சுல்தான்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' மற்றும் சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கிய விருமன் படத்திலும் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த 2 படங்களின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி 2, பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் கார்த்தி. 

இதில் சர்தார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்தாண்டு முடிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை அண்மையில் தொடங்கினர். இதில் கார்த்தி போலீஸ் அதிகாரி கெட் அப்பில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. 

இந்நிலையில், சர்தார் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. ஏனெனில், படத்தின் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாம். அவர் குணமாகி வரும் வரை படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது.

சர்தார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் 'கர்ணன்' பட நாயகி ரஜிஷா விஜயன் நடிக்கின்றார். மேலும் நடிகை சிம்ரன் வயதான கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும், திலீப் சுப்புராயன் சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார்.