karthi produce surya movie

சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில், 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்க உள்ள திரைப்படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தப் படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்க உள்ளார். ஏற்கனவே செல்வ ராகவன் சிம்புவை வைத்து 'கான்' படத்தை இயக்கி அதனை கைவிட்டார். இந்தப் படத்தைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இவர் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் ஒரு சில கடன் பிரச்னைகளால் வெளிவராத நிலையில் உள்ளது.

மேலும் தனுஷிடம் கால்ஷீட் கேட்க, ஏற்றி விட்ட ஏணியை மறந்தது போல சொந்த அண்ணனுக்கே பிஸியாக உள்ளதால் கால்ஷீட் இல்லை என கூறி விட்டார் தனுஷ். தற்போது இவர் சொன்ன கதை சூர்யாவிற்கு மிகவும் பிடித்துப் போக, முதல் முறையாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இந்தப் படத்தை இவரது தம்பி கார்த்தி பங்குதாரராக உள்ள 'ட்ரீம் வாரிர்ஸ்' பட நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.