karthi movie name is dev

சூர்யாவின் '2டி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வந்த 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின், படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தில் 'வனமகன்' திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சயிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். மேலும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் 'செம' படத்தில் நாயகியாக நடித்த அர்த்தனா பினுவும் நடித்துள்ளார். 

இந்த படத்தை தொடர்ந்து, கார்த்தி அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை தொடர்ந்து மீண்டும் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் இந்த படத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படத்திற்கு கார்த்தியின் சகோதரர் சூர்யாவின் மகன் பெயரான 'தேவ்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.