'மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் 'கைதி'. தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் 'கைதி'. தந்தை - மகள் செண்டிமென்ட்டுடன், ஒரே இரவில் நடக்கும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அசத்தலான வரவேற்பை பெற்றது. பாடல், ஹீரோயின் இல்லாமல் முழுவதும் கதையை மட்டுமே நம்பி களமிறங்கிய 'கைதி' திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. விஜய்யின் 'பிகில்' என்ற பிரம்மாண்ட படத்துக்கு போட்டியாக வந்த 'கைதி' படம் கார்த்தியின் முந்தைய படங்களின் சாதனைகளை மட்டுமல்லாது. மாஸ் ஹீரோக்களின் சாதனையையும் உடைக்க ஆரம்பித்துள்ளது.

 


"கைதி" படம் ரிலீஸ் ஆன சில நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்  "கைதி"திரைப்படம் இதுவரை 108 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் தல அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான "நேர்கொண்ட பார்வை" படத்தின் மொத்த வசூலையும், கைதி படம் பின்னுக்குத் தள்ளியுள்ளது. 

தல அஜித் இந்த ஆண்டு நடித்த "விஸ்வாசம்", "நேர்கொண்ட பார்வை" இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானவை. ஏற்கெனவே விஸ்வாசம் படத்தின் வசூலை "பிகில்" திரைப்படம் முந்தியதாக கூறப்பட்ட நிலையில், விஜய், அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் கட்டி புராளாத குறையாக சண்டை போட்டனர்.  தற்போது "நேர்கொண்ட பார்வை" படத்தின் வசூலையும் கார்த்தியின் "கைதி" திரைப்படம் முறியடித்துள்ளது தல ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.