சூர்யாவின் '2டி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின், வெற்றிக்கு பிறகு கார்த்தி, இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். 

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை தொடர்ந்து மீண்டும் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் இந்த படத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படத்திற்கு கார்த்தியின் சகோதரர் சூர்யாவின் மகன் பெயரான 'தேவ்' என்ற பெயர் கூட்டியுள்ளனர்.

இந்த படத்தில் கார்த்தி இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார் என்பது இந்த படத்தின் போஸ்டர் வெளியானபோதே தெரிந்தது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு 'தேவ்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் ரகுல் ப்ரீத் சிங்குடன் கார்த்தி மிகவும் நெருக்கமாக நடித்துள்ள காட்சிகளும் வெளியாகியுள்ளது.