நடிகர் சங்க கட்டிட நிதிக்காக விஷாலும் கார்த்தியும் கைகோர்த்திருக்கும் படம் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா'. இப்படத்தை பிரபுதேவா இயக்குகிறார். கதாநாயகியாக 'வனமகன்' படத்தில் நடித்துள்ள சாயிஷா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆர்யாவும் நடிக்கவிருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் வியாபாரமும் தொடங்கியுள்ளது. பிரபல நடிகரும், தயாரிப்பாளர், விநியோகஸ்தருமான அருண்பாண்டியன் ஒரு மிகப்பெரிய தொகைக்கு வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மறைந்த இயக்குனர் கே.சுபாஷின் கதைக்கு பிரபுதேவா திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். பிரபுதேவாவின் ரீ-என்ட்ரி, மூன்று முன்னணி நடிகர்கள், படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆகியவை இப்படத்தின் மீதாக எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.