நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் 'தேவ்' படத்தின் படப்பிடிப்பு குலுமணாலி பகுதியில் நடந்தது. இதற்காக படக்குழுவினர் 140 பேர் அங்கு சென்று இருந்தனர். கார்த்தியும் குலுமணாலி புறப்பட்டு சென்றார்.

ஆனால் அங்கு திடீரென்று கனமழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டதால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டனர் படக்குழுவினர். நடிகர் கார்த்தியும் நிலச்சரிவில் சிக்கி காருக்குள்ளேயே பல மணிநேரம் தவித்தார். தற்போது அவர் அங்குள்ள ஒரு கிராமத்தில் தங்கி இருக்கிறார். 

இந்நிலையில் கார்த்தியை தொடர்பு கொண்டு பிரபல நாளிதழ் அவரிடம் பேசியபோது, 'தேவ்' படத்தின் காட்சிகளை குலுமணாலி நடுவே படிப்பிப்பு வைக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு கார், பஸ்' மற்றும் இருசக்கர வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

நிலைச்சரிவினால் பாறைகள் உருந்து வந்த்து நானே கண்டேன். வேகமாக வந்த வெள்ளம் சின்ன சின்ன பாறைகளை அடித்து வந்தது. இந்த பதற்றமான சூழ்நிலையை பார்த்தபோது ஒரு நிமிடம் உயிரே பொய் வந்தது போல் இருந்தது.

இதனால் படப்பிடிப்பு நான் காரில் சென்றபோது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரோட்டில் கார்கள் நகரவே இல்லை. 4 , 5 , மணி நேரம் நான் காரிலேயே இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது பிறகு அருகில் இருந்த கிராமத்துக்கு சென்று தங்க ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே தங்கி இருக்கிறேன். ஆனால் எங்கள் படக்குழுவினர் 140 பேர் எங்கே தங்குவார்கள், சாப்பிடுவார்கள், எப்படி கீழே இறங்குவார்கள், தற்போது அவர்கள் நிலைமை என்ன? என்று நினைத்தாலே வருத்தமாக உள்ளது என கார்த்தி கூறியுள்ளார். மேலும் இந்த பாதிப்பால் தயாரிப்பாளர் லட்சுமணனுக்கு ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.