'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் மாரிசெல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் முதன் முறையாக உருவாகியுள்ள 'கர்ணன்' திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

நெல்லை அருகே செட் அமைத்து நடைபெற்று வந்த “கர்ணன்” பட ஷூட்டிங் டிசம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தந்து. விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட உள்ள நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு டீஸருடன் வெளியிட்டுள்ளனர்.

தன்னுடைய உரிமைக்காக போராடும் சாமானியன் ஒருவனை பற்றி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின், டீசரில்... குதிரை, யானை, நாய் போன்ற விலங்குகள் காட்டப்படுகிறது. பின்னர் நடிகர் தனுஷ் வாளுடன், ஓடி வந்து மலை மேல் நின்று, தன்னுடைய கையில் உள்ள வாளை உயர்த்தி காட்டுவது போன்றும் உள்ளது. இத்துடன், 'கர்ணன்' திரைப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்த நிலையில்...

 நாளை, தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் திரையரங்குகளில் இந்த படம் ரிலீசாகும் தேதி நாளை காலை 11.06 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Scroll to load tweet…