“பரியோறும் பெருமாள்” படம் மூலமாக ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த மாரிசெல்வராஜ் உடன் தனுஷ் இணைந்துள்ள திரைப்படம் கர்ணன். இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தின் ஷூட்டிங்கின் கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதியுடன் நிறைவடைந்தது. அடுத்தடுத்து படங்களில் காமிட்டாகியுள்ளதால் படு பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தில், கிராமிய கலைஞர் மாரியம்மாள் பாடிய 'கண்டா வரச்சொல்லுடா' பிப்ரவரி 18 ஆம் தேதி வெளியாகியது. இந்த பாடலுக்கு தனுஷ் ரசிகர்கள் மட்டும் இன்றி, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இந்த பாடல் ஒரு சில சர்ச்சைகளும் எழுந்துள்ளது.

இதை தொடர்ந்து, தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர்... கலைப்புலி தாணு இந்த படத்தில் இடம் பெற்றுள்ள செகண்ட் சிங்கள் பாடல், மார்ச் 2 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Scroll to load tweet…