பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பிரச்சனை குறித்து ஏற்கனவே பல நடிகைகள் குற்றம் சாட்டி உள்ள நிலையில், தற்போது மீண்டும் இந்த பிரச்சனை தலைதூக்கி உள்ளது.   நடிகை கராத்தே கல்யாணி , தன்னை பிரபல நடிகர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த வருடம், தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி,  தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, பல இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள்  பயன்படுத்திகொண்டு வாய்ப்பு தராமல் ஏமாற்றியதாக கூறினார். இவர் வெளியிட்ட லிஸ்டில் தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களும் அடங்குவார்கள்.

மேலும் ஹாலிவுட், பாலிவுட் தாண்டி, கோலிவுட்டில் 'மீ டூ' அமைப்பு மூலம் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் சின்மயி. இவரை தொடர்ந்து திரைப்பட நடிகைகள் மற்றும் அலுவலகங்களில் வேலை செய்து வரும் பெண்கள் பலரும் தங்களுடைய வாழ்க்கையில் சந்தித்த பாலியல் பிரச்சனைகள் குறித்து மீ டூ இயக்கத்தின் மூலம் வெளிப்படையாக கூறினர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய, தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணியிடம் 'மீ டூ' பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்த அவர்... "இந்த பிரச்சனை சினிமாவில் மட்டுமல்ல அனைத்து துறையிலும் இருக்கிறது. மிக பெரிய கம்பெனிகளில் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்றவை நடக்கிறது.

அதே போல் சினிமாவில் ஒரு படி மேலே போய், படுக்கைக்கு அழைக்கிறார்கள். பலர் பட ஒப்பந்தத்துடன் சேர்த்து படுக்கையும் தான் பேசுகிறார்கள். ஒரு முறை தனக்கு படவாய்ப்பு மற்றும் ரூ 50 ஆயிரம் தருவதாக கூறி, பிரபல நடிகர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆனால் நான் ஒப்புக்கொள்ளவில்லை. நாம் மனதளவில் மிகவும் தைரியமாக இருந்தால், யாரும் நம்மை தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதனால் தான் சினிமாவில் இந்த உயரத்திற்கு வந்துள்ளேன் என கூறினார். இவரின் இந்த கருத்துக்கு பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.