காபி வித் கரண் என்ற டிவி நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமாக அறியப்பட்டவர் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார். இவர் இயக்கிய பல படங்கள் இவருக்கு நிறைய விருதுகளை பெற்று பெற்றுத்தந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆளுக்கு இவர் முதல் முதலில் இயக்கிய குச்சி குச்சி ஹோதா ஹே படம், இவருக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது, இவர் இயக்குனர் என்பதையும் தாண்டி ஒரு சில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் நடத்தி வரும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகைகள் அனுஷ்கா சர்மா மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சில பல உண்மைகள் வெளி வந்தன.

கரண் ஜோஹார் இயக்கத்தில் அனுஷ்கா ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை இயக்கியபோது அனுஷ்கா மீது தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாக கரண் தெரிவித்தார். 

கரண் தன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக கூறியதை கேட்டு நான் நிஜமாகவே மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் நான் கரண் மீது பாலியல் தொல்லை புகார் அளிக்கலாம் என்று இருந்தேன் என்றார் அனுஷ்கா. என்னை மட்டும் அல்ல நடிகை ஜாக்குலினையும் கண்ட இடத்தில் தொட்டுள்ளார் கரண்.

மனிஷ் மல்ஹோத்ராவின் பார்ட்டியில் ஜாக்குலினே இதை தெரிவித்தார் என்று அனுஷ்கா கூறினார். சட்ட விஷயங்களை பின்னர் ஒரு நாளில் மெதுவாக பேசிக் கொள்ளலாம். 

நான் உங்கள் மீதும் அன்பு வைத்துள்ளேன். உங்களுக்கு எதுவும் கெட்டது நடக்கக் கூடாது என்று நினைக்கிறேன் என்று கூறி சமாளித்தார் கரண்.