இந்தியாவிற்கு 1983ம் ஆண்டில் முதல் உலக கோப்பையை எடுத்து கொடுத்தவர் முன்னாள் கேப்டன் கபில் தேவ். பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கபில் தேவ், சிறந்த வீரர் மட்டுமல்ல.. சிறந்த கேப்டனும் கூட.

இன்றளவிலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேவையான ஆலோசனைகளையும் அணி குறித்த மதிப்பீடு மற்றும் கருத்துகளையும் கூறுவதோடு, அணியின் வளர்ச்சிக்கும் ஆலோசனைகளை வழங்கிவருகிறார். 

ஏற்கனவே தோனி மற்றும் சச்சினின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்பட்டது. தற்போது கபில் தேவின் வாழ்க்கை வரலாறு “83” என்ற தலைப்பில் திரைப்படமாகிறது. கபில் தேவ் இந்தியாவிற்கு உலக கோப்பையை வாங்கிக்கொடுத்த வருடம் 1983 என்பதால் “83” என படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் பத்மாவத் புகழ் ரன்வீர் சிங், கபில் தேவாக நடிக்கிறார். போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேபோல், ராகுல் டிராவிட், யுவராஜ் சிங் ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப்பட உள்ளன.