கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படமான, 'அர்ஜுன் ரெட்டி' படத்தை, பல மொழிகளிலும் ரீமேக் செய்ய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருவது அனைவரும் அறிந்தது தான்.

அந்த வகையில் தமிழ் ரீமேக்கில், நடிகர் விக்ரம் மகன் துருவ் அர்ஜுன் ரெட்டி ரீமேக்காக உருவாகும் 'ஆதித்ய வர்மா' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். 

இந்நிலையில் தற்போது இந்த படம், 'கபீர் சிங்' என்ற பெயரில் இந்தியில் தயாராகி வெளிவந்துள்ளது.  இதில் ஷாஹித் கபூர் கதாநாயகனாகவும், கியாரா அத்வானி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் தற்போது வெளியாகி இந்தி பட உலகினர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் மட்டும் கபீர் சிங் ஒரே நாளில் ரூபாய் 21.5 கோடி வசூல் செய்திருப்பதாகவும்,  உலகம் முழுவதும் ஒரே நாளில் 25 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.