பிரபல கவிஞர் சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் ஜூலை 29 ஆம் தேதி சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் மிக பிரமாண்டமாக உலகநாயகன் கமலஹாசன் தலைமையில் திருமணம் நடந்து முடிந்த நிலையில்,  தற்போது 7 வருடத்திற்கு முன், காதலர் சினேகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை கன்னிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

பிரபல கவிஞர் சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் ஜூலை 29 ஆம் தேதி சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் மிக பிரமாண்டமாக உலகநாயகன் கமலஹாசன் தலைமையில் திருமணம் நடந்து முடிந்த நிலையில், தற்போது 7 வருடத்திற்கு முன், காதலர் சினேகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை கன்னிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ் திரையுலகில் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சினேகன், இரண்டாவது இடத்தை பிடித்தார். 

சமீபகாலமாக, அரசியல் மீது தீவிர கவனம் செலுத்தி வரும் சினேகன் உலக நாயகன் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறார். சென்னை வளசரவாக்கம் பகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினாலும் இது தனக்கு ஒரு பாடமாக இருந்ததாகவும், தொடர்து மக்கள் சேவையில் ஈடுபடுவேன் என கூறி வந்தார்.

இந்நிலையில் திடீர் என சினேகனின் திருமண பேச்சு அடிபட்டு வந்த நிலையில், இவரது காதல் விவகாரமும் வெளியே வந்தது. சினேகனும், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகையுமான கன்னிகாவும், சுமார் 8 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன், ஜூலை 29 ஆம் தேதி திருமணமும் பிரமாண்டமாக நடந்தது.

திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகும் நிலையில், கன்னிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சினேகனுடன் முதல் முதலாக கடந்த 7 வருடங்களுக்கு முன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, "என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது... வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிகள். கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோவம் வேண்டாம். அன்புடன் கன்னிகா சினேகன் என பதிவிட்டுள்ளார்". இவரது இந்த பதிவு தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் நெட்டிசன்கள் பலர் தங்களுடைய திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

Scroll to load tweet…