kannadassan advise youngsters
"யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே", ஒருவேளை மாறநினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்’’ என்றவர் கவிஞர் கண்ணதாசன். அவரின் பிறந்த தினம் இன்று.
வாழ்க்கையில் பல அவமானங்களையும், சந்தித்த அவர், தன் அனுபவங்கள் மூலம் பாடல்களாகவும், கட்டுரைகளாகவும் எழுதியதால்தான் பின்னாளில் அவர், மிகச்சிறந்த கவிஞராக உருவாவததற்கு அடிகோலியது.
‘கன்னியின் காதலி’ படத்தில், இடம்பெற்ற அவரது முதல் பாடல். அன்று முதல் திரையுலகோடு இலக்கியத்தையும், அரசியலையும், வாழ்க்கையையும் தன்னோடு இணைத்துக்கொண்டு அதில் பயணிக்கலானார்.
ஜனனத்தையும், மரணத்தையும் தவிர, மனித வாழ்வில் எந்த முடிவும் பரிசீலனைக்குரியதே என்பதை அவர் எண்ணமாகக் கொண்டிருந்தார். அவர் கொண்டிருந்த கனவுகளும் லட்சியங்களும் வாழ்வினோடும், மக்கள் நலனோடும் தொடர்புள்ளவையாய் இருந்தன என்பது மறுக்க முடியாத உண்மை.
இப்படி பல திறமைகள் மூலம் தன்னை நிலை நிறுத்தி கொண்ட கவிஞர் கண்ணதாசன் இளைஞர்களுக்கும் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் அது என்ன வென்றால்... ‘அன்று எத்தனையோ புத்தகங்கள் எழுதக்கூடிய அளவுக்கு உடலில் வலுவிருந்தது, ஆற்றல் பொங்கி வழிந்தது.
ஆனால், வெறும் ரத்தத் துடிப்புக்கு முதலிடம் கொடுத்து பொன்னான காலத்தை விரயமாக்கினேன். இன்று எத்தனையோ எழுத வேண்டும் என்று துடிக்கிறேன். அனுபவங்கள் பொங்கி வழிகின்றன. ஆனால், எனது பாழாய்ப்போன உடம்பு விட்டுக்கொடுக்க மறுக்கிறது.
இளைஞனே என்னைப் பார்த்து விழித்துக்கொள். காலம் பொன்னானது. காலம் தாழ்த்தி உணர்ந்து கொள்ளாதே’’ என்று இளைஞர்களுக்கு கூறி இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
