கன்னட நடிகை விஜயலக்ஷ்மி என்பவர் தான் காதலித்த இயக்குனரை ரகசிய திருமணம் செய்து கொண்டு, போலீசிடம் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ள சம்பவம், திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட திரையுலகில், துணை நடிகையாக இருப்பவர் விஜயலக்ஷ்மி. பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். 

தற்போது 'துங்கபத்ரா' என்கிற படத்தை இயக்கி வரும், ஆஞ்சிநேயா என்பவரை விஜயலக்ஷ்மி காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதல் விவகாரம், நடிகையின் வீட்டிற்கு தெரியவர, அவருடைய அம்மா மற்றும் வளர்ப்பு தந்தை ஆகியோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் ஆஞ்சிநேயனை திருமணம் செய்து கொள்ள கூட என்பதற்காக, அவசர அவசரமாக திருமணத்திற்கு மாப்பிளை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே நடிகை விஜயலட்சுமி வீட்டில் இருந்து வெளியேறி, பெற்றோரை மீறி இயக்குனர் ஆஞ்சிநேயனை ரகசிய திருமணம் செய்து கொண்டார். 

திருமணம் முடித்த கையோடு, போலீஸ் பாதுகாப்பு கேட்டு இந்த ஜோடி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த சம்பவம் கன்னட திரையுலகில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.