kannadam actor kasinath pass away

பிரபல கன்னட நடிகர் காசிநாத் கடந்த எட்டு மாதங்களாக hodgkin's lymphoma என்ற வகை புற்று நோய் பதிப்பு காரணமாக அவதிப் பட்டு வந்தார். 67 வயதாகும் இவர் கடந்த இரண்டு நாட்களாக சங்கரா புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காசிநாத் உயிரிழந்தார். காசிநாத்தின் மறைவு திரையுலகினரிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னடத்து பாக்யராஜ், என அனைவராலும் அழைக்கப்பட்ட இவர், கன்னடத்தில் 40 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளதோடு, பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் பன்முக திறமையோடு விளங்கியவர் காசிநாத்.

இவருடைய மரணம் குறித்து அறிந்த பலர் தங்கள் இரங்கலைத் தெரிவித்து, இவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


Scroll to load tweet…
Scroll to load tweet…