பத்து வருடங்களுக்கு பின், தமிழ் சினிமாவில் மீண்டும் பிரபல நடிகை நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

பத்து வருடங்களுக்கு பின், தமிழ் சினிமாவில் மீண்டும் பிரபல நடிகை நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இயக்குனராக அறிமுகமாகி தற்போது அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சசிகுமார். தற்போது இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனர் சத்யசிவா ஏற்கனவே 'கழுகு' போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் இவர் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் நடிகர் கரண் நடித்த 'காக்க காக்க', அர்ஜுன் நடித்த 'வல்லக்கோட்டை' போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் கன்னட நடிகை ஹரிப்ரியா. இவர் தமிழில் சுமார் 10 வருடங்களுக்கு பின் மீண்டும் ஹீரோயினாக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் விக்ராந்த், துளசி, உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் பிரசன்னா இசையமைக்கவுள்ளார். ராஜ பட்டாச்சார்யா ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகும், இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கான அனைத்து பணிகளும் தற்போது மும்முரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. மிகவும் வித்தியாசமான கதையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.