தோனி மகளை பின்னுக்குத் தள்ளிய ’அய்ரா’...கே.ஜி.எப். ஹீரோவின் செல்லக்குட்டி...  சோசியல் மீடியாவில் வைரலாகும் மழலை வாழ்த்து...!

கே.ஜி.எப். திரைப்படத்தின் ஹீரோவான யஷின் மகள் அய்ரா மழலை மொழியில் தீபாவளி வாழ்த்து கூறும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கே.ஜி.எப். என்ற ஒரே படத்தின் மூலம் மாஸ் ஹீரோக்கள் பட்டியலில் இடம் பெற்றவர் கன்னடி நடிகர் யஷ். ஒரு கன்னட படம் இந்த அளவுக்கு சக்கை போடு போடும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் வசூலில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. 

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, யஷ் அவரது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆனால் அந்த வீடியோ இப்போ செம ட்ரெண்டிங்கில் இருக்க காரணம் யஷ் இல்ல, அவரோட செல்ல மகள் அய்ரா. ஓராண்டை நிறைவு செய்துள்ள அய்ராவிற்கு, இது முதல் தீபாவளி. அதுமட்டுமில்லாமல் இந்த குட்டி தேவதை 6 மாத குழந்தையா இருக்கும் போதில இருந்தே சோசியல் மீடியா பிரபலம்.  யஷ்,  தனது மனைவி ராதிகா பண்டிட், செல்ல மகள் அய்ராவுடன் சேர்ந்து தீபாவளி வாழ்த்து கூறும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில் கன்னடத்தில் தீபாவளி வாழ்த்து சொல்லும் யஷ் தனது ஒரு வயது மகளான அய்ராவை பார்த்து, வாழ்த்து கூற சொல்கிறார். அந்த குட்டி தேவதையும் மழலை மொழியில் கொஞ்சுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமாக தோனி மகள் ஸிவாவின் சேட்டை வீடியோக்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை அள்ளி வந்த நிலையில், அவரை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னுக்கு வந்துள்ளார் செல்லக்குட்டி அய்ரா.