Asianet News TamilAsianet News Tamil

Thalaivar 169 : தலைவர் 169-ல் வில்லன் இவரா?... ரஜினியை அடிக்க மாஸ் நடிகரை களமிறக்கிய நெல்சன்

Thalaivar 169 : நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ள நடிகர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. 

kannada actor Shiva Rajkumar to play an important role in Rajinikanth's Thalaivar169
Author
Tamil Nadu, First Published May 6, 2022, 10:44 AM IST

நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக படு தோல்வியை சந்தித்தது. இருப்பினும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. பீஸ்ட் படம் ரிலீசாவதற்கு முன்னரே, ரஜினியின் 169-வது படத்தை இயக்க கமிட் ஆகி இருந்தார் நெல்சன்.

பீஸ்ட் படத்துக்கு கிடைத்த நெகடிவ் விமர்சனங்களை பார்த்து ஷாக் ஆன ரஜினி, நெல்சன் இயக்கத்தில் நடிக்க தயக்கம் காட்டியதாகவும், பின்னர் அனிருத் பேசி சமாதானப்படுத்தியதை அடுத்து தான் இப்படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டாராம். அண்மையில் நெல்சனும், ரஜினியும் தலைவர் 169 படம் திட்டமிட்டபடி உருவாகும் என சூசகமாக அறிவித்தனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய்யும், வில்லியாக ரம்யா கிருஷ்ணனும் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதுதவிர நடிகை பிரியங்கா மோகனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

kannada actor Shiva Rajkumar to play an important role in Rajinikanth's Thalaivar169

இந்நிலையில், தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ள நடிகர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ஷிவ ராஜ்குமார், தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் அவர் கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்.... Saani Kaayidham : ஒரு சீன் விடாமல்... மொத்த படமும் யூடியூபில் லீக்கானது - சாணிக்காயிதம் படக்குழு அதிர்ச்சி

Follow Us:
Download App:
  • android
  • ios