கார்த்தி தற்போது நடித்து முடித்துள்ள விருமன் படத்திலிருந்து ப்ரோமோ சாங் வெளியாகியுள்ளது. கஞ்சா பூ கண்ணாலே என்னும் பாடல் ப்ரோமோவை சூர்யா வெளியிட்டுள்ளார்.

கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் முத்தையா. இவர் கார்த்தியை நாயகனாக வைத்து விருமன் படத்தை இயக்கியுள்ளார்.. இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி அறிமுகமாகிறார்.

 2டி நிறுவனம் மூலம் சூர்யா தயாரிக்கும் இப்படம் கிராமத்து கதையம்சம் கொண்டது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். விருமன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. வருகிற ஜூன் மாதம் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

விருமன் படம் முடிவடைந்ததை அடுத்தது கார்த்தி மற்றும் முத்தையா அடுத்து திட்டத்திற்கு சென்று விட்டனர். நடிகர் கார்த்தி தற்போது சர்தார் படத்திலும், நடிகை அதிதி ஷங்கர் சிம்புவுக்கு ஜோடியாக கொரோனா குமார் படத்திலும், அதேபோல் இயக்குனர் முத்தையாவும் தனது அடுத்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கி உள்ளார். இதற்கிடையே கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் இப்படம் திட்டமிட்டபடி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. 

Scroll to load tweet…

இந்நிலையில் யுவனின் அசத்தலான இசையில் விருமன் படத்திலிருந்து கஞ்சா பூ கண்ணாலே என்னும் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த பாடலில் பருத்திவீரன் பட கெட்டப்பில் நாயகனும், நாயகியும் உள்ளனர். ப்ரோமோவை வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா, 25 ஆண்டை தனது இசை பயணத்தில் தொடும் யுவன் சங்கர் ராஜாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். 

YouTube video player