பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நாயகியாக மாறியுள்ளார். மணிகர்னிகா படத்தில் நடித்ததன் மூலம் கங்கனா ரனாவத் இந்த உச்சத்தை எட்டியுள்ளாராம். 

பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான பத்மாவத் திரைப்படம் சக்கைபோடு போட்டது. இந்த படத்தில் நடிப்பதற்காக தீபிகா படுகோனோ சுமார் 10 கோடி ரூபாய் பெற்றதாக சொல்லப்படுகிறது. இது பாலிவுட்டிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகையாக தீபிகா படுகோனே பார்க்கப்பட்டார்.

 

தீபிகா படுகோனேவுக்குப் பிறகு, இரண்டாவது இரடத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா அதிக சம்பளம் வாங்கி வந்தார். இந்த நிலையில், இவர்கள் இருவரையும் ஓவர்டேக் செய்யதுள்ளார் கங்கனா ரனாவத். நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருகிறார். இவர் நடித்த 'குயீன்' திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளியது. 

 
இந்த நிலையில், ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'மணிகர்னிகா' படத்தில் நடித்துள்ள கங்கனா ரனாவத்திற்கு 14 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நாயகியாக கங்கனா ரனாவத் உள்ளார். கோலிவுட்டில் ரிலீசான தாம்தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அறிமுகமானவர் கங்கனா ரனாவத், தற்போது இந்தியாவின் ராணியாகவே மாறியுள்ளார்.