இயக்குநர் ஏ.எல்.விஜய் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைக்கதையாகக் கொண்டு இயக்கவிருக்கும் ‘தலைவி’ படத்தில் ஜெ’ வேடத்தில் பிரபல இந்தி நடிகை கொங்கனா ரனாவத் நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அற்விக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பாரதிராஜா தொடங்கி, பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குநர்,இயக்குநர் கவுதம் மேனன் மற்றும் ஏ.எல் விஜய் ஆகியோர் ஜெயலலிதாவின் சுயசரிதையைப் படமாக்கவிருப்பதாக அறிவித்திருந்தனர். இவர்களில் கவுதம் மேனன் மட்டுமே படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார். ஆனால் தியேட்டர்களுக்கு வராது. தொலைக்காட்சி தொடராக மட்டுமே வெளிவரும்.

அதற்கு அடுத்தபடியாக ஜெ’வாழ்க்கையை இயக்குவதாக அறிவித்திருந்த இயக்குநர் விஜய் இன்னும் படத்தைத் தொடங்கவில்லை. காரணம் ஜெ’ பாத்திரத்தில் நடிக்க இவர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்த மலையாள நடிகையான நித்யா மேனன் படத்தில் நடிக்க தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தார்.

இந்நிலையில் படத்தில் இருந்து அவரைத் தூக்கிய விஜய் தற்போது பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத்தை ஒப்பந்தம் செய்துவிட்டார். சமீபத்தில் ‘மணிகர்னிகா’ படத்தை இந்தியில் இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த கங்கனா தமிழில் ஏற்கனவே மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘தாம் தூம்’ படத்தில் நடித்துள்ளார்.