பாலிவுட்டில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இருப்பவர் கங்கனா ரனாவத். தற்போது உள்ள நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்குபவரும் இவர் தான். தற்போது தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதான் வாழ்க்கை வரலாறு குறித்த "தலைவி" படத்தில் நடித்து வருகிறார். 

இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த "பங்கா" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய கங்கனா, "முன்னணி நடிகைகள் சிலர், ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்கள் சம்பளம் கேட்பது தவறு என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஏனென்றால் ஹீரோக்கள் தான் படத்தின் வசூலுக்கு காரணமாம். அப்படி நான் நினைக்கவில்லை. ஆணுக்கு பெண் சமம் என்று தான் நினைக்க வேண்டும். நான் எந்தவிதத்திலும் ஆணுக்கு குறைந்தவள் இல்லை என பெண்கள் எண்ணிக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் ஊடக பேட்டிகளில் இந்தி நடிகைகளான டாப்ஸி, ஆலியா பட், சோனாக்‌ஷி சின்கா ஆகியோர் ஹீரோயின்கள் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் கேட்பது தவறு என குறிப்பிட்டிருந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஓப்பன் மேடையில் அனைவரையும் தெறிக்க வைத்துள்ளார் கங்கனா ரனாவத்.