நடன இயக்குனர், இயக்குனர், நடிகர்,  என பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குபவர் லாரன்ஸ். இவர் இயக்கத்தில் வெளியான காஞ்சனா,  காஞ்சனா 2 , ஆகிய படங்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி, மிகப் பெரிய வெற்றி பெற்றது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதைத் தொடர்ந்து தற்போது காஞ்சனா 3 , படம் இயக்கும் வேலையில் மும்முரம் காட்டி வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்நிலையில் நாளை ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து கொடுக்கும் வகையில், காலை 11 மணியளவில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகை ஓவியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றொரு நடிகையாக வேதிகா நடித்துள்ளார்.

 மேலும் கோவை சரளா, கபீர் சிங், மனோபாலா ,ஸ்ரீமன் ,தேவதர்ஷினி, சத்யராஜ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது.