ராகவா லாரன்ஸ், காஞ்சனா  2  வெற்றிபெற்றதற்கு பின் தற்போது அதன் தொடர்ச்சியாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘காஞ்சனா 3’.

2007-ம் ஆண்டு இவர் இயக்கிய ஹாரர் காமெடி படமான ’முனி’ பெரு வெற்றியடையவே, அதன் வரிசையில் தொடர்ந்து படம் இயக்க ஆரம்பித்தார் லாரன்ஸ்.

முனியின் இரண்டாம் பாகமான காஞ்சனாவை 2011-ல் இயக்கினார். பின்னர் முனியின் 3-ம் பாகத்தை, ’காஞ்சனா 2’வாக 2015-ல் வெளியானது. இதைத் தொடர்ந்து தற்போது முனி படத்தின் 4-ம் பாகமான ’காஞ்சனா 3’ விரைவில் வெளியாகவிருக்கிறது.

இதில் முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த, வேதிகாவே மீண்டும்  ஹீரோயினாக நடிக்க, மற்றொரு ஹீரோயினாக ஓவியா நடித்துள்ளார்.

மேலும் கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் இதிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இதன் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.