அலெக்ஸாண்ட்ரா ஜாவிக்கும் காதலருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவர் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.  

தமிழ் சினிமாவில் நடிகர், நடன இயக்குநர், திரைப்பட இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி, நடித்த பேய் படங்களான முனி மற்றும் கஞ்சனா ஆகியவற்றின் அனைத்து பாகங்களுமே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா 3’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி டம்போலி ஆகியோருடன் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா ஜாவி என்பவரும் ரோஸி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் ரோஸி கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கோவாவில் காதலன் உடன் வசித்து வந்த அலெக்ஸாண்ட்ரா ஜாவி, நேற்றிரவு தான் தங்கியிருந்த அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலெக்ஸாண்ட்ரா ஜாவிக்கும் காதலருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவர் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அலெக்ஸாண்ட்ரா ஜாவி இருவரும் கோவாவில் தங்கியிருந்த ஓட்டல் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அலெக்ஸாண்ட்ரா ஜாவி சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். மேலும் பிரிந்து சென்ற காதலனை விசாரணைக்காக தேடும் வேலையிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.