இயக்குனர், நடிகர், நடன இயக்குனர் என திரையுலகில் தனக்கென தனி அங்கீகாரத்தை பதித்தவர் ராகவா லாரன்ஸ். மேலும் தன்னுடைய அம்மா பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் உருவாக்கி, அதன் மூலம் பல குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் செய்து வருகிறார். 

தமிழ் நாட்டில் நடக்கும் சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பல கல்லூரி மாணவர்களுடன் இவர் நடத்திய மெரினா புரட்சியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

இந்நிலையில் கடந்த வாரம் இவர் இயக்கி நடித்த, 'காஞ்சனா 3 ' திரைப்படம் வெளியாகியானது. இந்த படத்தில் ஓவியா, வேதிகா, நிதி என மூன்று கதாநாயகிகளை வைத்து கலர் ஃபுல்லாக இந்த பேய் படத்தை இயக்கி இருந்தார் ராகவா லாரன்ஸ். 

ஏற்கனவே வெளியாக பாகங்களை போலவே இப்படமும் இருக்கிறது என ரசிகர்களிடம் சற்று நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்தாலும், தெலுங்கு மற்றும் தமிழில் வசூலுக்கு குறைவில்லாமல் அனைத்து திரையரங்கங்களிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, தமிழ் மற்றும் தெலுங்கில்... ஒரு வாரத்தில் மட்டும் 'காஞ்சனா 3 ' திரைப்படம் ரூ.14 கோடி வசூலித்துள்ளதாம். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.