சமீபத்தில் வெளியான காஞ்சனா- 3 படத்தின் நாயகி பாலியல் புகார் அளித்துள்ளதால் நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

காஞ்சனா -3 படம் சமீபத்தில் வெளியாகியது. இதில் நடிகர் லாரன்ஸுடன் ரஷ்ய நடிகை ரி ஜாவி அலெக்ஸாண்டர் நடித்துள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக கணவர் மற்றும் குழந்தையுடன் எம்.ஆர்.சி.நகரில் வசித்து வருகிறார். விளம்பரப் படங்களில் நடித்து வரும்  ரி ஜாவி அலெக்ஸாண்டர் ‘காஞ்சனா-3’ படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடிகர் லாரன்சுடன் இணைந்து நடித்துள்ளார். 

ஓரிரு நாட்களுக்கு முன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ’நடிகர் ரூபேஷ் குமார் என்பவர் விளம்பர படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி என்னை புகைப்படம் எடுத்தார். பின்னர் அதை மார்பிங் செய்து வாட்ஸ்அப்பில் அனுப்பி தன் விருப்பப்படி நடந்துகொள். இல்லாவிட்டால் இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினார். ஒருகட்டத்தில் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.

 

இந்த புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம்  நடிகர் ரூபேஷ்குமாரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.