திருநங்கையையும் விட்டுவைக்காத திரையுலகம்... அட்ஜெஸ்ட் செய்தால் வாய்ப்பு என கொச்சையாக பேசிய தயாரிப்பாளர்...!
இந்த மாதிரியான அழைப்புகளை எல்லாம் நான் தொடர்ந்து தவிர்த்து வந்தேன். அதனால் எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முக திறமைகளை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவரது இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. இந்த படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், திருநங்கையாக நடித்திருந்தார், அவருடன் மற்றொரு திருநங்கையும் மகளாக நடித்திருந்தார். திருநங்கைகளை மையமாக வைத்து ராகவா லாரன்ஸ் இயக்கிய அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
அந்த படத்தில் திருநங்கை நடிகையாக நடித்த ப்ரியா, சமீபத்தில் மகளிர் தினத்தின் போது கொடுத்த பேட்டி ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் பட வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என பிரபல நடிகைகள் முதல் புதுமுகங்கள் வரை மீடூ புகார்கள் குவிந்து வருகிறது. இந்த சமயத்தில் தன்னையும் அட்ஜெஸ்ட் செய்து கொண்டால் பட வாய்ப்பு தருவதாக கூறியதாக பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
அந்த பேட்டியில், நான் படவாய்ப்பிற்காக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வந்தேன். அப்போது என்னிடம் பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். அப்படி ஒரு நாள் தயாரிப்பாளர் ஒருவர் எனது தொலைபேசி எண்ணிற்கு போன் செய்தார். முதலில் சாதாரணமாக பேசிய அவர், நீங்கள் எப்படி உங்களது உடலை மாற்றினார்கள் என வேறு விதமாக பேச ஆரம்பித்தார். அப்போது அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொண்டால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறி கொச்சையாக பேச ஆரம்பித்தார். நான் உடனடியாக போனை கட் செய்துவிட்டேன்.
இந்த மாதிரியான அழைப்புகளை எல்லாம் நான் தொடர்ந்து தவிர்த்து வந்தேன். அதனால் எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்னை மாதிரி இருக்கும் பல திருநங்கைகளுக்கும் இப்படி நடந்திருக்கும் என மிகுந்த மனவேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.