சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள முதல் படமான 'கனா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்தது என்பதற்காக கண்ணீர் விடும் தனது தந்தையின் கண்ணீரை துடைக்க கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடும் ஒரு மகளின் 'கனவு' தான் இந்த 'கனா' படத்தின் கதை என தெரிகிறது.

ஐஸ்வர்ய ராஜேஷ், கிரிக்கெட் வீராங்கனை கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். அவருடன் அனுபவமுள்ள நடிகரான சத்யராஜ் இணைந்திருப்பது இந்த படத்தின் மிகப்பெரிய பலம் எனலாம். இயக்குனர் அருண்ராஜா காமராஜின் கதை மற்றும் நட்சத்திரங்கள் செலக்சன், திபு நிணனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை மிக கச்சிதமாக அமைந்துள்ளதால் டிரைலரை பார்க்கும்போதே முழு படத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.