Kamalin old film titled new film titled Director

குணா படத்தில் வரும் கமலின் பாடல் வரியான "அதையும் தாண்டி புனிதமானது" என்ற வரியை தன்னுடைய படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளார் இயக்குனர் வெங்கட் ரமணன்.

குணா படத்தில் கமல்ஹாசன் மனநலம் பாதித்தவர் போன்று நடித்திருப்பார். அதில், எப்போதும் அபிராமி அபிராமி என்று கூறிக் கொண்டிருப்பார். கோவிலுக்கு திருடச் சென்ற இடத்தில் ஹீரோயினைக் கண்டதும் அவரை அபிராமியாக பாவித்து அவர் மீது காதல் வயப்பட்டு அவரை கடத்திச் சென்றுவிடுவார்.

தனியாக குகைக்குள் வைத்து கமல், அபிராமிக்கு காதல் கடிதம் எழுதச் சொல்வார். அதில் வரும் பாடல் வரிகளில் ஒன்றானா "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல; அதையும் தாண்டி புனிதமானது" என்று வரும்.

இதில், 'அதையும் தாண்டி புனிதமானது' என்ற வரியைக் கொண்டு புதிய படம் ஒன்று உருவாகவுள்ளது.

இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் ரமணன் இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடந்துள்ளது

அப்போது இயக்குநர் கூறியது: "கணவருக்கும், மனைவிக்கும் இடையே இருக்கும் புரிதலை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

வி.கே.கண்ணன் இசையமைக்கும் இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளது. மே மாதம் படம் வெளியாகுமாம்.