நேற்று முதலமைச்சர் பன்னீர் செல்வதால் நிகழ்ந்த மாபெரும் மாற்றத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியது. இவ்வளவு நாட்கள் மெளனமாக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று தான் பட்ட அவமானங்களை ஊடகங்கள் முன் போட்டு உடைத்தார்.
இதனை குறிப்பிட்டு இதே பிப்ரவரி 7ம் தேதியில் கமல் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்த தருணத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
அது என்னவென்றால் விஸ்வரூபம் படத்தை வெளியிட அவர் எவ்வளவு கஷ்டபட்டார் என அனைவருக்கும் தெரியும். பிப்ரவரி 7 - இதே நாளில் தான் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பெரிய பிரச்னையை சந்தித்தது.
இதுபற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல், 'மக்களின் அன்பு மட்டும் இருந்தால் எந்த சூழ்ச்சியில் இருந்தும் மீண்டு வெற்றி பெறலாம் என குறிப்பிட்டுள்ளார்.
இன்று இதே தேதியில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார், இதனால் மக்கள் ஆதரவு இவருக்கு கிடைத்தால் கண்டிப்பாக இந்த சூழலை இவர் முறியடிப்பார் என சூசகமாக கூறியுள்ளார் .
