நீட் தேர்வு தங்களின் கனவை கானல் நீர் ஆக்கிவிடும் என்கிற பயத்திலேயே, பல மாணவ, மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்து செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் வசிப்பவர் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம். இவரது 19 வயது மகளான ஜோதிஸ்ரீ துர்கா கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில், நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜோதிஸ்ரீ துர்கா உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், அவரது வீட்டை சோதனையிட்ட செல்போனில் ஜோதிஸ்ரீ துர்கா பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நான் உங்களை விட்டு செல்வதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். நான் உண்மையில் நன்றாக படித்தேன். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. நான் நீட் தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பேன். அம்மா I am going to miss you என்று கூறியுள்ளார். 

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மரணத்திற்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர், தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 

மேலும் பலரும், தற்கொலை முயற்சி என்பது எந்த ஒரு விஷயத்திற்கும் முடிவானது என, கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் போட்டுள்ள ட்விட் செய்துள்ளதாவது... "மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன, மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும். 

நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும்  தர வேண்டியது நம் கடமை.  செய்வோம் அதை! என கூறியுள்ளார்.