அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு எதிராக முதலமைச்சர் பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். விரைவில் தான் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை பிடிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார், இந்நிலையில் பல்துறையை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்தது அவருக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் தற்போது உள்ள அரசியல் சூழல் குறித்து தனது கருத்துக்களை தொடர்ந்து ட்விட்டர் மூலம் பதிவிட்டு வருகிறார்.
முதலமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்பாக ஆட்சி புரிந்து வருவதாகவும் அவரது ஆட்சியில் தவறு எதுவும் நடைபெற வில்லை எனவும் கமலஹாசன் கூறியுள்ளார். அவர் தனது நண்பர் இல்லையென்றும் அவரோடு தான் பேசியதோ.. கைகுலுக்கியதோ.. இல்லை என்றாலும் தனது ஆதரவு பன்னீர்செல்வத்திற்கு உண்டு என தற்போது பகிரங்கமாக கமல் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ஓபிஎஸ்ன் பலம் மேலும் கூடும் என அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியோடு கூறியுள்ளனர்.
