கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யாரும் வெளியேற்றப்படாத நிலையில், இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் உள்ள, சோம், சம்யுக்தா, ரியோ ராஜ், அனிதா, ஆரி, சுசித்ரா மற்றும் பாலாஜி ஆகியோரில் இருந்து யார் வெளியே செல்வார் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

இந்த வாரத்தை பொறுத்தவரை, சுசித்ரா தான் சரியாக விளையாட வில்லை என்பது போல் போட்டியாளர்கள் கூறி வருகிறார்கள். நாமினேஷன் படலத்தில் கூட சுசித்ரா தான் அதிக நபர்களால் நாமினேட் செய்யப்பட்டார். எனவே அவர் தான் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளராக இருக்கலாம் என்கிற தகவல் ஒரு பரவி வருகிறது.

மேலும், சுசித்ராவும் ஜெயில் பாலாஜி தூங்கி கொண்டிருந்தபோது, இந்த வாரம் நான் போய்விடுவேன் சந்தோஷமாக இருங்கள் என, தென்பாண்டி சீமையிலே பாடல் பாடி குலுங்கி குலுங்கி அழுதார். இதை வைத்து பார்க்கும் போது, சுசியும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மனநிலையில் தான் உள்ளார் என்பது தெரிகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், உலக நாயகன் கமல்ஹாசன் போட்டியாளர் ஒருவரை எலிமினேஷனலில் இருந்து காப்பாற்றுவது வெளியாகியுள்ளது. நாமினேஷன் பட்டியலில் உள்ள சோம் சேகர் வெளியேற்றப்பட்டால் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என கமல் கேட்க அதற்கு அவர் எமோஷனலாக பேசுகிறார். பின்னர் நீங்கள் சேப் என்பதை கூறி கமல் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அந்த புரோமோ இதோ...