பிக்பாஸ் நிகழ்ச்சியில்  5 நாட்கள் போட்டியாளர்கள் ஆச்சு நடந்தாலும், வாரத்தில் இரண்டு நாட்கள் உலக நாயகன் ஆச்சு தான். ஒரு வாரம் முழுக்க, போட்டியாளர்கள் செய்த தவறை... சுட்டி காட்டி, எந்த இடத்தில் பாராட்ட வேண்டுமோ அங்கு பாராட்டி, எங்கு கடிந்து சொல்லவேண்டுமா அதனை கட்சிதமாக செய்வார்.

மேலும், கிடைக்கும் கேப்பில் எல்லாம்.... அரசியல் பேச்சுகளும் தூள் பறக்கும். எப்போதும் சனி கிழமை ப்ரோமோக்களில் அரசியலை நுழைத்து தன் கருத்தை தெரிவிக்கும் கமல் வழக்கம் போல் இந்த முறையும் அந்த செயலை தவறாமல் செய்துள்ளார்.

அந்த வகையில் பாலாஜிக்கு அறிவுரை சொல்வது போல் மக்களுக்கு ஒரு அறிவுரை சொல்கிறார். பாலா இந்த வாரம் மணிக்கூண்டு டாஸ்க்கில் சரியாக விளையாடாமல் அவ்வப்போது தூங்கி விளையாட்டை மிஸ் செய்ததால் அவரை குறிப்பிடும் வகையில் ‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்’, என்று கூறியதோடு, ‘நீங்கள் விழிப்புடன் இருந்தால் மாற்றங்கள் வரும். உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை உருவாக்க போகிறது என்பதை பார்க்கலாம்’ மறைமுகமாக அரசியல் பற்றி பேசியுள்ளார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போது பாலாவின் தூங்கும் காட்சிகள் இருந்தாலும், உங்க நாயகனின் பேச்சு... இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.