பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை சில விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விதிகளை போட்டியாளார்கள் மீறினால் அவர்களுக்கு பிக்பாஸ் தவறுக்கு ஏற்றாப்போல் சில தண்டனைகள் கொடுப்பார். 

இப்படி கடைப்பிடிக்கப்படும் ஒரு விதிமுறை... போட்டியாளர்களுக்கு வெளியுலகில் என்ன நடக்கிறது என்பது தெரிய கூடாது என்பது.  பிக்பாஸ் வீட்டிற்கு கெஸ்ட் யாராவது சென்றால் கூட அவர்களும் இந்த விதிமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படும்.

இந்நிலையில், இந்த விதிமுறையை மீறும் விதத்தில் நடிகர் கமல்ஹாசன் நடந்துக்கொண்டுள்ளார். நேற்று அகம் டிவி வழியாக பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்த கமல், வெளியுலகில் நடந்த ஆசிரியர் பகவான் பற்றி உள்ளே உள்ள போட்டியாளர்களிடம் பகிர்ந்துக்கொண்டார். 

போட்டியாளர்கள் பிக் பாஸ் விதியை மீறினால் அவர்கள் எப்படி தண்டிக்கப்படுகிறார்களோ அதே போல் விதியை மீறிய தொகுப்பாளர் கமல் தண்டிக்கப்படுவாரா...? என பலர் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.