kamalhassan affected in fever

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து டெங்கு மற்றும் வைரல் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதற்கு உரிய சிகிச்சை இன்றி நாள்தோறும் பல கிராமங்களில் சிறுவர்கள் பெரியவர்கள் என பலர் உயிரிழந்து வருவது வாடிக்கையாகிவிட்டது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடிகர் கமல் காய்சல், தொண்டை வலி, மற்றும் இருமலால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவரது இல்லத்திற்கு மருத்துவர்கள் குழு நேரில் சென்று சிகிச்சை அளித்து அவரை ஒய்வெடுக்க சொல்லி அறிவுருத்தியதை தொடர்ந்து. நடிகர் கமலஹாசன் கலந்துக்கொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் டெங்கு உள்ளிட்ட மர்ம கய்ச்சல்கள் பரவுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என கமல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.