kamalhaasan vishwarooban triler release date announced

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமான விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நேரடியாகவும், தெலுங்கில் மொழிமற்றம் செய்தும் இந்த திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இப்படத்தின் டிரைலர் வரும் ஜூன் 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழில் நடிகர் கமலஹாசன் வெளியிட உள்ள இந்த டிரைலரை, இந்தியில் பிரபல நடிகர் அமீர் கான் மற்றும் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் வெளியிட உள்ளனர்.

கமலஹாசன் நடிப்பில் வெளியாகி ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம் என்பதால், இந்த படத்தின் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

கமலஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், சேகர் கபூர், வஹீதா ரஹ்மான், பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.