- Home
- Cinema
- தொலைக்காட்சி
- லாக்கப்பில் கார்த்திக்: துடி துடித்துப் போன ரேவதி: அதிரடி திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியல்!
லாக்கப்பில் கார்த்திக்: துடி துடித்துப் போன ரேவதி: அதிரடி திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியல்!
Karthik lockup Revathi heartbroken : கார்த்திகை தீபம் சீரியலில் போலீஸ் லாக்கப்பில் கார்த்திக் இருப்பது தெரிந்து ரேவதி துடிதுடித்துப் போன நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக் வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்ட நிலையில் சந்திரகலா தனது நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். முதல்கட்டமாக காளியம்மாள், சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோர் இணைந்து சாமுண்டீஸ்வரியை போட்டு தள்ள ரௌடி கும்பலை அனுப்பி வைத்தனர். ஆனால், இந்த விஷயம் தெரிந்து உடனே அங்கு வந்த கார்த்திக் அவர்களுக்கே தெரியாமல் தனது அத்தையின் குடும்பத்தை காப்பாற்றினார்.
கார்த்திகை தீபம் சீரியல் சந்திரகலா மற்றும் ரேவதி
இதை வைத்து சந்திரகலா நாடகமாடினார். அவராகவே ஏற்பாடுகள் செய்து ரௌடிகளை அனுப்பி வைத்து விட்டு பிறகு காப்பாற்றுவது போன்று காப்பாற்றினார் என்றார். மேலும், சாமுண்டீஸ்வரிக்கு எதிராக சந்திரகலா 2ஆவது நாடக்தை அரங்கேற்றினார். அதில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் மாட்டிவிட பிளான் போட்ட நிலையில் கார்த்திக் அதையும் தடுத்து நிறுத்தி தனது அத்தையை காப்பாற்றினார்.
சாமுண்டீஸ்வரி
அடுத்ததாக கார்த்திக் இருக்கும் வரையில் சாமுண்டீஸ்வரியை ஒன்றும் செய்ய முடியாது என்று கருதிய சந்திரகலா தனக்கு தானே கத்தியால் குத்திக் கொண்டு நாடகமாடினார். இதன் காரணமாக தனது தங்கையை குத்திவிட்டு எஸ்கேப் ஆன கார்த்திக் மீது சாமுண்டீஸ்வரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கார்த்திக் கைது செய்யப்பட்டார்.
ரேவதி அண்ட் சாமுண்டீஸ்வரி
இந்த விஷயம் தெரிந்த ரேவதி துடிதுடித்துப் போன நிலையில் தனது அம்மாவையும் மீறி கார்த்திக்கை சந்திக்க வந்தார். மேலும் தான் வீட்டில் இல்லாத நிலையில் சித்தியின் ஆட்டம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதனால், அவரை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அவருடன் பேசிவிட்டு வெளியில் வரும் போது போலீஸ் கான்ஸ்டபிள் அம்மா எப்படியாவது கார்த்திக்கை வெளியில் கூட்டிட்டு போயிடுங்கள். அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது.
கார்த்திக் கைது
இன்ஸ்பெக்டர் ரொம்ப நல்லவர் கிடையாது. யாருடனோ போனில் பேசும் போது லாக்கப்பில் வைத்து போட்டுத்தள்ள பிளான் போட்டுருக்காங்க என்றார். இதைத் தொடர்ந்து உடனே தனது வீட்டிற்கு வந்த ரேவதி அம்மாவுடன் கார்த்திக்கிற்கு எதிராக கொடுத்த கேஸை வாபஸ் பெற வேண்டும் என்றார். ஆனால், சாமுண்டீஸ்வரி மறுக்க, உடனே நவீனுக்கு போன் போட்டு லாயர் ஏற்பாடு செய்துவிட்டீங்களா என்று கேட்க, சனி மற்றும் ஞாயிறு கோர்ட் லீவு, அதனால் திங்கள் கிழமை தான் ஜாமீனில் வெளியில் எடுக்க முடியும் என்று சொல்லிட்டாங்க.
பஞ்சாயத்தில் பிராது கொடுத்த சாமுண்டீஸ்வரி
இதெல்லாம் ஒரு புறம் இருக்க கடைசியாக சந்திரகலா கார்த்திக்கிற்கு எதிராக பிளான் போட்டு அதனை சாமுண்டீஸ்வரியிடம் கூறவே அவரும் தங்கையின் வாக்கை வேத வாக்காக கொண்டு பஞ்சாயத்தில் பிராது கொடுத்தார். அதில் இனிமேலும் ரேவதி கார்த்தி உறவை வெட்டி விட வேண்டும் என்று பேசினார். அதோடு கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.