Kamal Haasan : கோரிக்கை வைக்கப்பட்ட வெகு சில நாட்களில் அதற்கான முன்னெடுப்பை எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் பிரபல நடிகர் கமல்ஹாசன்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை "பாடும் நிலா" என்கின்ற அன்பான பட்டத்தோடு பல ஆண்டுகளாக இசை மாமேதையாக பயணித்து வந்தவர் தான் எஸ்.பி பாலசுப்ரமணியம். இவருடைய குரலுக்கு மயங்காத மனிதர்களே இல்லை என்றால் அது கொஞ்சம் கூட மிகையல்ல. அந்த அளவிற்கு தமிழ் மொழி மட்டுமல்லாமல் சுமார் 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியவர் எஸ்.பி பாலசுப்ரமணியம். திரைத்துறையை தாண்டி பழகுவதற்கும் மிகவும் இனிமையானவர் SPB என்பது அவரது ரசிகர்களின் கருத்து.

எண்ணற்ற விருதுகள், இயக்கம், பாடல், இசை, நடிப்பு மற்றும் தயாரிப்பு என்று பல்வேறு பரிமாணங்களை எடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென நீங்காத ஒரு இடத்தோடு பலருடைய மனங்களில் இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறார் எஸ்.பி.பி. கடந்த 1946ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி பிறந்த அவர். இந்த கொடிய கொரோனா காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். 

"விஜய் அரசியலில் ஜெயிக்க 20 வருஷமாகும்" சீமானை உதாரணம் காட்டி பேசிய பிரபல நடிகர்!

இந்த சூழலில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ம் தேதி அவருடைய நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ள இந்த சூழலில், எஸ்பிபியின் மகன் எஸ்.பி.பி சரண் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அண்மையில் கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். அதில் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து, மண்ணை விட்டு மறைந்தாலும் அவர்களுடைய மனதை விட்டு மறையாமல் என்றென்றும் வாழ்ந்து வரும் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள், பல ஆண்டுகாலம் வாழ்ந்த சென்னை காம்தார் நகர், அல்லது அவர் வசித்த வீதிக்கு எஸ்பிபி பெயரை சூட்ட ஆவணம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை விடுத்து இருந்தார். 

இதற்கு இசை துறையை சேர்ந்த மற்றும் கலைத் துறையை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், நேற்று செப்டம்பர் 25ஆம் தேதி ஒரு முக்கியமான அறிவிப்பினை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். அதில் "பாடும் நிலா" எஸ்.பி.பி அவர்களது நினைவு நாளில் அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு, எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை என பெயரிடப்படும் என்றும், இந்த அறிவிப்பால் அவருக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன் என்று அறிவித்திருந்தார். 

Scroll to load tweet…

இது திரை துறையினர் மத்தியிலும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுடைய ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதல்வர ஸ்டாலினின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உலக நாயகன் கமல்ஹாசன் ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஒப்பற்ற இசை கலைஞரும் எனது மூத்த சகோதரருமான எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் பெயரை சென்னையில் அவர் வாழ்ந்த தெருவுக்கு சூட்டி, அதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

Scroll to load tweet…

"பாலு அண்ணாவின் ரசிகர் கூட்டத்தில் இருக்கின்ற ஒருவனாக என் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தமிழக முதல்வருக்கு நான் உரித்தாக்குகிறேன்" என்றும் தெரிவித்திருக்கிறார்.

இளையராஜா இசையில் உதடு ஒட்டாத வார்த்தைகளால்.. வாலி எழுதிய பாடல் எது தெரியுமா?