Bigg Boss: மாயாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கமல்! புரிந்து கொள்ளாத பூர்ணிமா.. இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து, பல்வேறு கோணங்களில் ஏசியா நெட் தொகுப்பாளர் அலசி ஆராய்ந்து பேசியுள்ள வீடியோ இதோ..
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கலந்த 6 சீசன்களை விட, மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. பிரதீப் ஆண்டனியின் வெளியேற்றம் தற்போது வரை பல பிக்பாஸ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள கூடாத ஒன்றாக தான் உள்ளது. அதே நேரம், கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்தாலும், ஆண்டவர் தான் வெளியேற்றிய போட்டியாளரை மீண்டும் வீட்டுக்குள் வர வைத்து விட கூடாது என்கிற நோக்கத்தில் மிகவும் தெளிவாக இருந்ததை பார்க்க முடிந்தது.
பூர்ணிமா முன் வைத்த பால் விஷயம் உள்ளிட்ட சில விஷயங்களுக்கு குறும்படம் போட்டு பிரதீப் மீது எந்த தவறும் இல்லை என, மக்கள் கூறிய பின்னரும் இதுகுறித்து கமல் ஒரு வார்த்தை கூட அவரை விசாரிக்கவில்லை. வினுஷா பற்றி நிக்சன் அடித்த கமெண்ட் , மற்றும் மாயா உள்ளாடையை காட்டிய விவகாரத்தி கூட கமல் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றது பிரதீப் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
இது போன்ற சம்பவங்களால், கமல் மாயா மீது கூடுதல் அக்கறை காட்டுகிறாரோ என்கிற தோற்றமும் ஏற்படுகிறது. மேலும், பூர்ணிமா தங்கள் மீது உள்ள தவறை மக்கள் எடுத்து கூறியும் இன்னும் புரிந்து கொள்ளாமல் செயல்படுவது... இவற்றின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் விதத்தில் உள்ளது. அதிலும் மாயா பல் துலக்குவதற்கு பிரெஷ் தரமாட்டேன் என கூறியபோது, அதற்காக விசித்ரா செய்த செயல் தான் பூர்ணிமாவுக்கு தவறாக தெரிந்ததே தவிர, மாயா ஒரு அடிப்படை விஷயத்தை மறுத்துள்ளார் என்பதை அவர் பெரிதாகவே எடுத்து கொள்ளாமல் கண்ணீர் விட்டு பேசினார்.
இப்படி ஆரம்பத்தில் இருந்து நடந்து வரும் பல விஷயங்களை மையப்படுத்தி, ஏசியா நெட் தளத்தின் தொகுப்பாளர், வீடியோவில் பேசியுள்ளது மட்டும் இன்றி, இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள விக்ரம், அக்ஷயா, பூர்ணிமா, பிராவோ, மணிச்சந்திரா, ரவீனா, கானா பாலா, விசித்ரா ஆகியோரில், விக்ரம், அக்ஷயா, கானா பாலா ஆகிய மூவர் தான் மிகவும் சுவாரசியம் இல்லாமல் விளையாடி வருவதால் இவர்களில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என தெரிகிறது.
பிக்பாஸ் பற்றிய முழு தகவல்களுக்கு இந்த வீடியோவை பாருங்க..