Vikram movie :விக்ரம் பட ஷூட்டிங்கே முடிஞ்சிருச்சு... ஆனா அந்த ஒரு விஷயத்த மட்டும் சஸ்பென்ஸா வச்சிருக்காங்களே?
Vikram movie shoot wrapped : 110 நாட்கள் கடின உழைப்புக்கு பின்னர் விக்ரம் படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வந்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மாநகரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் (lokesh kanagaraj), முதல் படத்திலேயே முத்திரை பதித்து, தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனராக உயர்ந்தார். இதையடுத்து கார்த்தியை வைத்து இவர் இயக்கிய கைதி திரைப்படம், பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியான மாஸ்டர் (Master) திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதன்முலம் ஹாட்ரிக் வெற்றியை ருசித்த லோகேஷ் கனகராஜ், தற்போது கமல்ஹாசனுடன் கூட்டணி அமைத்துள்ளார். 'விக்ரம்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான, ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
இப்படத்தில் சிவானி (shivani), மகேஷ்வரி, மைனா நந்தினி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதிரடி ஆக்சன் படமாக இது தயாராகி வருவதால், வில்லன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ். அதன்படி இப்படத்தில் 7 வில்லன் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளதாம்.
விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் மெயின் வில்லனாக நடித்து வரும் நிலையில், சம்பத்ராம், செம்பன் வினோத், டெல்லி கணேஷின் மகன் மகாதேவன், மைம் புகழ் கோகுல்நாத், மெர்சல் பட வில்லன் ஹாரிஸ் பெராடி ஆகியோர் துணை வில்லன்களாக நடித்திருக்கிறார்களாம்.
இவ்வாறு பிரம்மாண்ட கூட்டணியில் தயாராகி வந்த விக்ரம் (vikram) படத்தின் ஷூட்டிங் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. கடைசியாக பகத் பாசில் நடித்த காட்சி படமாக்கப்பட்டது. அதுகுறித்த வீடியோவை வெளியிட்டுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 110 நாட்கள் கடின உழைப்புக்கு பின்னர் விக்ரம் ஷூட்டிங் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்கள் உருவாகும் போதே அதன் கதைக்களம் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்துவிடும். ஆனால் விக்ரம் படத்தின் ஷூட்டிங் முடிஞ்சும் படத்தின் கதையை வெளியில் கசியவிடாமல் படக்குழு செயல்பட்டு வருவது திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இப்படம் வருகிற ஏப்ரம் மாதம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Don Release date : ராஜமவுலியுடன் மோதலை தவிர்த்த சிவகார்த்திகேயன்.... டான் படத்தின் ரிலீஸ் தேதி அதிரடி மாற்றம்