vikram movie business : விக்ரம் படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தின் வியாபாரமும் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளதாம்.
மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கமல்ஹாசனுடன் இணைந்து 'விக்ரம்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான, ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
இப்படத்தில் சிவானி (shivani), மகேஷ்வரி, மைனா நந்தினி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதிரடி ஆக்சன் படமாக இது தயாராகி வருவதால், வில்லன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ். அதன்படி இப்படத்தில் 7 வில்லன் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளதாம்.

விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் மெயின் வில்லனாக நடித்து வரும் நிலையில், சம்பத்ராம், செம்பன் வினோத், டெல்லி கணேஷின் மகன் மகாதேவன், மைம் புகழ் கோகுல்நாத், மெர்சல் பட வில்லன் ஹாரிஸ் பெராடி ஆகியோர் துணை வில்லன்களாக நடித்திருக்கிறார்களாம்.
விக்ரம் படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தின் வியாபாரமும் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளதாம். சமீபத்திய தகவல்படி, விக்ரம் படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்நிறுவனம் சுமார் ரூ.110 கோடி ரூபாய்க்கு இந்த உரிமைகளை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகை படத்தின் பட்ஜெட்டை ஈடு செய்துவிட்டதாகவும், இனி வருவதெல்லாம் தயாரிப்பாளருக்கு லாபம் தான் என கூறப்படுகிறது. விக்ரம் படம் ரிலீசுக்கு முன்பே கல்லாகட்டி உள்ளதால் கமல்ஹாசன் ஹாப்பியாக உள்ளாராம். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.
